இராணுவ வீரர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது!!!
அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து இராணுவ வீரர்களுக்கும், இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.
இராணுவ சட்டத்தின் படி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் சிலர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எவரேனும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுட்டதாக தகவல் கிடைப்பின் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இராணுவத் தளபதி மேலும் கூறியுள்ளார்.