கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை!!
தெற்கு பாணந்துறையில் மாதுப்பிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இரு குழுக்களிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை பாரதூரமானதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டுபேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதில் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலஸார் தெரிவித்தனர்.
பாணந்துரை மாதுப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கக் கூடிய 19 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.