யாழ். நீதிமன்ற தாக்குதல் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!!
யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாகக் கைதாகி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 28 சந்தேகநபர்கள் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதவான் பெ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைக்கு நீதி கோரி மே மாதம் 20ம் திகதி யாழ். நீதிமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின்போது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக 160 பேர் வரையில் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.