தண்ணீர்ப் பிரச்சினையால் இருவர் கொலை!!
மெதிரிகிரிய, கொடபொத்த பிரதேசத்தில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பிரதேசத்திலுள்ள வயல் நிலப்பகுதி ஒன்றில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதுடன், விவசாய நடவடிக்கைக்காக நீரைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
30 மற்றும் 46 வயதுடைய மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த இருவரே கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலை சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.