சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தல் நடைபெறுவதற்காக அர்ப்பணிப்பேன்.!!

Read Time:2 Minute, 15 Second

1241107152my3நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் சுதந்திரமானதாகவும் நியாயமானதாகவும் மற்றும் நீதியானதாகவும் நடைபெறுவதற்கு அர்ப்பணிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

2015 தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பொது நலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் நேற்று மாலை (14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் அவர்களின் கடமைகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 8ம் திகதிக்கு முன்னர் நாட்டின் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் இருந்ததாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அந்தப் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதுடன் நீதியையும் ஜனநாயகத்தையும் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலின் பின்னர் நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் ஏனைய அதிகாரங்களையும் அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அலவ்வ பிரதேசத்தில் உள்ள கடைத் தொகுதியொன்றில் தீ!!
Next post புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக தகவல் கருமபீடம் அமைப்பு!!