செயற்கை கருவூட்டல் மூலம் 62 வயதில் குழந்தை பெற்ற பெண்!!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் கருப்பாயி. இவருக்கு 62 வயது ஆகிறது. இவரது கணவர் விவசாயி. இவர்களுக்கு திருமணமாகி 35 ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் இல்லை.
எனவே, சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியை அணுகினர். அங்கு கருப்பாயியை டாக்டர் முத்துக்குமார் பரிசோதனை செய்தார். பின்னர் செயற்கை கருவூட்டல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து கர்ப்பம் அடைந்த கருப்பாயி தீவிரமாக பராமரிக்கப்பட்டு வந்தார். இதற்கிடையே 10–வது மாதத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
வயதாகி விட்டதால் ‘சிசேரியன்’ அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு பிரசவம் நடந்தது. குழந்தை 2.4 கிலோ எடை உள்ளது. தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர் முத்துக்குமார் தெரிவித்தார்.