திருநங்கைகள் கையில் விசில்: திறந்தவெளியில் அசுத்தம் செய்வோரை தடுக்க அதிரடி திட்டம்!!

Read Time:1 Minute, 38 Second

6edfb781-956f-4df5-b74f-f83f551e6e52_S_secvpfமலம் கழிக்க கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகள் அனைத்து வகை ஊடகங்களின் மூலமாக விளம்பரங்களை வெளியிட்டாலும், பல்வேறு காரணங்களால் பெரும்பாலான மக்கள் இன்றளவும், ஆள் நடமாட்டம் இல்லாத காலி இடங்களை தான் கழிப்பறைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த அவல நிலையை மாற்ற, மத்தியப் பிரதேச மாநில அரசின் இந்தூர் பகுதிக்குட்பட்ட உள்ளூர் நிர்வாகம், கடந்த நவம்பர் மாதம் பொது இடங்களில் மலம் கழிப்போரைக் காணும் பள்ளி மாணவ-மாணவிகள் அவர்களுக்கு அருகாமையில் சென்று சப்தமாக ‘விசில்’ அடிக்குமாறு தயார் செய்தது. இந்த அவமானத்துக்கு பயந்து பொது இடங்களில் மலம் கழிப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

இந்நிலையில், இதன் அடுத்தகட்டமாக மத்திய பிரதேசத்தில் உள்ள 3 மாவட்டங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 300 திருநங்கைகளுக்கு இலவச விசில்கள் கொடுத்து திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்பட இருப்பதாக மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேற்கு வங்காளத்தில் மார்க்.கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரசார் மோதல்: தொழிற்சங்க நிர்வாகி அடித்துக்கொலை!!
Next post பெங்களூருவில் பட்டப்பகலில் கல்லூரி மாணவியை தாக்கி மானபங்கம்: 25 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்!!