ஜேவிபி தேசிய பட்டியல் இவர்களுக்குத்தான்!!
மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடைக்கப்பெற்றுள்ள இரண்டு தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு நபர்களின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளர் சுனில் ஹந்துநெத்திக்கு ஒரு தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்க கட்சி தீர்மானித்துள்ளது.
மற்றைய தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை முன்னாள் கணக்காய்வாளர் சரத்சந்திர மாயாதுன்னவிற்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 543,944 வாக்குகளைப் பெற்ற மக்கள் விடுதலை முன்னணிக்கு 4 ஆசனங்களும் இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்களும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.