ஜனநாயகத்தை பலப்படுத்தி இருக்கின்றோம் – சம்பிக்க ரணவக்க!!
ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டமைத்து ஜனவரி 8ம் திகதி பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஐக்கிய தேசிய முன்னணிக்கு முடிந்துள்ளதாக பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இன்று பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வௌியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2020ம் ஆண்டு வரையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வோம்.
இந்த தேர்தலின் மூலம் விடுதலைப் புலி ஆதரவாளர்களை தோற்கடித்து ஜனநாயகத்தை பலப்படுத்தி இருக்கின்றோம்.
மிகவும் சவாலான காலத்தை எதிர்நோக்க இருக்கின்றோம். சர்வதேச மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்
எவ்வாறாயினும் வெவ்வேறான அரசியல் போக்குகளில் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதில் பின்நிற்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.