புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள்களை வௌியிடுவதற்குத் தடை!!

Read Time:1 Minute, 30 Second

1579044342exam-department22015 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களை பரீட்சைகள் ஆணையாளரின் அனுமதி இன்றி பகிரங்கப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தமுறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வரும் 23ம் திகதி இடம்பெறவுள்ளது.

அதன் பிரகாரம் பரீட்சைக்கான வினாத்தாள்களை பரீட்சைகள் ஆணையாளரின் அனுமதியின்றி பரீட்சை கண்காணிப்பாளர்கள் வைத்திருப்பதற்கோ அல்லது சட்டப்படி வௌியடுவதற்கு அனுமதிக்கப்பட்ட காலத்துக்கு முன்னதாக வௌியிடுவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பரீட்சை ஆணையாளரின் அறிவுறுத்தலை மீறுவோர் அல்லது மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவுறுத்தலை மீறி செயற்படுவோர் தொடர்பாக தகவல் கிடைத்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு பாரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க சத்தியப் பிரமாணம்!!
Next post ஐமசுமு தேசிய பட்டியல் இதோ: மக்கள் நிராகரித்த 7 பேருக்கு இடம்!!