ஜெர்மனி நாட்டில் வினோத சம்பவம்: 700 ஆண்டு பழமையான தேவாலயம் இடமாற்றம் செய்யப்படுகிறது; பெயர்த்து எடுத்து லாரியில் ஏற்றி செல்கிறார்கள்

Read Time:2 Minute, 58 Second

ஜெர்மனி நாட்டில் 700 ஆண்டு பழமையான தேவாலயத்தை பெயர்த்து எடுத்து லாரியில் ஏற்றி சென்று இடமாற்றம் செய்கிறார்கள். கிழக்கு ஜெர்மனியில் ஹெஸ்டாப் கிராமத்தில் 1297-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகப்பழமையான தேவாலயம் உள்ளது. இது ரோமன் கட்டிடக்கலைப்படி கட்டப்பட்டு உள்ளது. கற்களால் ஆன இந்த கட்டிடத்தின் உச்சியில் சிறிய கறுப்பு நிற கோபுரம் உள்ளது. இந்த தேவாலயம் அமைந்துள்ள இடத்தில் பழுப்பு நிலக்கரி அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 5 கோடி டன் அளவுக்கு நிலக்கரியை தோண்டி எடுத்து, மின்சார உற்பத்திக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, அந்த கிராமத்து நிலங்களை கையகப்படுத்தவும், தேவாலயத்தை இடமாற்றம் செய்யவும், மாநில அரசு திட்டமிட்டது. இதற்கு அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசின் முடிவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பல ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், கடந்த 2005-ம் ஆண்டு அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து, கிராம மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. அவர்கள் அங்கு போய் குடியேறினர். இதையடுத்து, தேவாலயத்தை இடமாற்றம் செய்வதற்கு, ரூ.17 கோடி வழங்கப்பட்டது. தேவாலயத்தை 12 மைல் தொலைவில் உள்ள போர்னா என்ற கிராமத்தில் உள்ள மார்ட்டின் லூதர் சதுக்கத்தில் போய் வைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

லாரியில் பயணம்

இதைத்தொடர்ந்து, அந்த பழமையான தேவாலயத்தை அப்படியே பெயர்த்து எடுத்து டிரெய்லர் லாரியில் ஏற்றி வைத்தார்கள். தேவாலயம் 65 அடி உயரமும், 48 அடி நீளமும் கொண்டது. அதன் எடை 750 டன். இவ்வளவு பெரிய தேவாலயத்தை பெயர்த்து எடுத்து டிரெய்லர் லாரியில் வைத்தனர்.

கடந்த வியாழக்கிழமை, தனது புதிய இடம் நோக்கி தேவாலயம் புறப்பட்டது. மிகவும் மெதுவாகவே டிரெய்லர் லாரி இயக்கப்படுகிறது. நாளை (புதன்கிழமை) அந்த தேவாலயம், போர்னா கிராமத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு மார்ட்டின் லூதர் சதுக்கத்தில் அந்த தேவாலயம் வைக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post என்னை அழிக்க துடிக்கிறார்கள் – விஜயகாந்த்
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…