இலங்கை கல்வி வளர்ச்சிக்கு நிதி மூலம் கைகொடுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!!
இலங்கையின் கல்வித் துறை முன்னேற்றத்திற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு வழங்கப்படவுள்ள இந்த உதவித் தொகை கடந்த மூன்று வருடங்கள் வழங்கப்பட்டதிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகமானதாகும்.
புதிய அரசாங்கத்தின் கல்வித் திட்டம் மற்றும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு உதவி வழங்க முன்வந்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது.
திறன் அபிவிருத்தி திட்டத்திற்கு 300 மில்லியன் ரூபாவும் உயர் கல்வி விருத்திக்கு 300 மில்லியன் ரூபாவும் இரண்டாம் நிலை கல்விக்கு 400 மில்லியன் ரூபாவும் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.