ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 6 எம்.பி.க்கள்- 100 பேர் பலி

Read Time:1 Minute, 48 Second

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராகவும் அமெரிக்க படைகளுக்கு எதிராகவும் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் காபூல் நகருக்கு அருகே பஹ்வான் என்ற இடத்தில் அங்குள்ள தொழிற்சாலைகளை பார்வை யிட எம்.பி.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் குழு சென்றது. புல் ஹும்ரி என்ற பகுதியில் சர்க்கரை ஆலை திறப்பு விழா விலும் அந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்த எம்.பி.க் களை வரவேற்க ஏராளமான பள்ளிக்கூட குழந்தைகளும் சாலையின் இரு புறங்கிலும் கூடி நின்றனர். அப்போது தலிபான் தீவிரவாதி ஒருவன் அந்த கூட்டத்துக்குள் புகுந்தான். திடீரென்று அந்த தற்கொலை படை தீவிரவாதி தனது உடலில் கட்டி இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் எம்.பி.க்கள் தொழிலாளர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட 100 பேர் உடல் சிதறி பலியானார் கள். 6 எம்.பி.க்கள் உடல் சிதறி பலியானதாக அரசு அறிவித்துள்ளது. எம்.பி.க்களை வரவேற்க வந்த ஏராளமான குழந்தைகளும் காயம் அடைந்தனர். 80-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அந்த பகுதி முழுவதும் போர்க்களம் போல உடல்கள் சிதறி கிடந்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சீனாவில் அதிகரித்து வரும் எயிட்ஸ் நோயாளர்கள்
Next post ஒரே மாதத்தில் 400 விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம்; ராணுவம்