இலங்கை அகதிகள் தாய்நாட்டிற்கு திரும்ப செல்வதற்காக சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது!!

Read Time:1 Minute, 41 Second

709557115Indiaதமிழ் நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகள் மீண்டும் தமது தாய்நாட்டிற்கு திரும்பி செல்வதற்கான சரியான சந்தர்ப்பம் ஒன்று உருவாகியுள்ளதாக ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் தலைவர் எஸ். சீ சந்திராஹாஸன் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகள் இருப்பதுடன் அவர்களில் 60,000க்கும் அதிகமானோர் இன்னும் அகதி முகாம்களில் வாழ்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்கு செல்ல விருப்பம் தெரிவிப்பார்களாயின் அதற்கான உதவிகளை செய்வதற்கு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஆகியன தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பு இலங்கை அகதிகள் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் இதுவரை 17 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருப்பதாகவும் எஸ். சீ சந்திராஹாஸன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை அகதிகளில் 3800பட்டதாரிகள் இருப்பதாகவும் அவர்கள் இலங்கைக்கு பாரிய சொத்தாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்வதேச விசாரணை கோரி காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!!
Next post வவுனியாவில் ரவுடிகளை ஓடவிட்டு வேடிக்கை பார்த்த பொலிஸார்! பொலிஸாரின் செயற்பாட்டில் மக்கள் விசனம்!!