வேனுக்குள் வைத்து மாணவிக்கு பாலியல் தொந்தரவுக்கு!!
பாடசாலை மாணவி ஒருவர் வேனுக்குள் வைத்து பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
பொகவந்தலாவையில் அமைந்துள்ள ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டவராவார்.
பொகவந்தலாவையிலிருந்து குயினா தோட்டம் வரை பயணிகளை ஏற்றிச்சென்ற வேன் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக குறித்த மாணவியின் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கின்றார்.
அத்தோடு குறித்த மாணவி வைத்திய பரிசோதனைக்காக பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.