புனர்வாழ்வு ஆணையாளரின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை!!

Read Time:1 Minute, 48 Second

1455760186Policeபொலன்னறுவை வெலிகந்த – கந்தகாடு முகாமில், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க பயணம் செய்த வாகனத்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் வெலிகந்த பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று மாலை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் கந்தகாடு முகாமிற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு உரை நிகழ்த்தியுள்ளார்.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் குறித்த விஜயத்தை நிறைவு செய்து கொண்டு செல்லும் போது நூற்றுக்கும் அதிகமான கைதிகள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

தம்மை விடுதலை செய்யுமாறு கைதிகள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டதாகவும், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பயணித்த வாகனம் மீது கல்வீச்​சு தாக்குதல் மேற்கொண்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதன்போது 05 இராணுவ அதிகாரிகள் காயமடைந்திருந்தனர்.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக மேலும் சில வாகனங்களும் சேதமடைந்துள்ளதுடன் கட்டிடம் ஒன்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு!!
Next post ஓமந்தை சோதனைச் சாவடி நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும்!!