அமைச்சரவை அதிகரிப்பு பிரேரணை பாராளுமன்றில் நிறைவேற்றம்!!
8வது பாராளுமன்றில் அமையவுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையை அதிகரிக்க கோரி பாராளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சமர்பித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் தொடக்கம் குறித்த பிரேரணை விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், மாலை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
அதன்போது பிரேரணைக்கு ஆதரவாக 143 பேரும் எதிராக 16 பேரும் வாக்களித்ததுடன் 63 பேர் பங்கேற்கவில்லை.
அமைச்சரவையை அதிகரிக்க அனுமதி கிடைத்துள்ளதால் நாளைய தினம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேரணைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி, பொதுசன ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் வாக்களித்தனர்.