மாயாதுன்னேவின் வெற்றிடத்தை நிரப்புகிறார் பிமல் ரத்நாயக்க!!
Read Time:52 Second
மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பிமல் ரத்நாயக்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மாயாதுன்னே நேற்று பதவி விலகியதை அடுத்து அவரது வெற்றிடத்தை நிரப்ப பிமல் ரத்நாயக்கவின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
பிமல் ரத்நாயக்க கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating