பின்லாந்து நாட்டில், பள்ளிக்கூடத்தில், சரமாரியாக சுட்ட மாணவன்: 7 பேர் பலி

Read Time:1 Minute, 28 Second

பின்லாந்து நாட்டில், துசூலா நகரில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில், திடீரென்று ஒரு மாணவன் துப்பாக்கியை எடுத்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாக சுடத்தொடங்கினான். தங்கள் பள்ளியை சேர்ந்த மாணவனின் இந்த செயலைப் பார்த்து பீதியடைந்த மாணவர்களும், ஆசிரியர்களும் சிதறி ஓடினார்கள். சிலர் ஜன்னல் வழியாக எகிறி குதித்து தப்பினார்கள். வராண்டாவில் சர்வசாதாரணமாக நடந்து சென்ற அந்த மாணவன், ஒவ்வொரு வகுப்பின் கதவுகளையும் தட்டி, உள்ளே இருந்தவர்களை நோக்கி சுட்டபடி சென்றான். இதில் 7 பேர் பலியானார்கள். `ï டுபி’ என்ற இணைய தளத்தில், கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற ஜோகீலா படுகொலை தொடர்பான படம் இடம்பெற்ற சில மணி நேரங்களில் இந்த சம்பவம் நடைபெற்றது. கைத்துப்பாக்கி அதிக அளவில் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள பின்லாந்தில் இதேபோல் வன்முறை சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மவுனத்தை கலைத்தார் நயன்தாரா
Next post இலங்கை பட்ஜெட்டில், இதுவரை இல்லாத அளவில் ராணுவத்துக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு: பல இடங்களில் விடுதலைப்புலிகளுடன் கடும் போர்