சர்வதேச விசாரணையை வலியுறுத்திய நடைபயணம் 4வது நாளாகவும் தொடர்கிறது!!

Read Time:1 Minute, 39 Second

1154727471Yaal´ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்´, ´உள்நாட்டு பொறிமுறை விசாரணையை ஏற்கமாட்டோம்´ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நடைபயணம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது.

கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சி நகரிலிருந்து ஆரம்பமான நடைபயணம் அன்றையதினம் மாலை ஆனையிறவை வந்தடைந்தது.

ஆனையிறவிலிருந்து இரண்டாம் நாள் பயணம் ஆரம்பிக்கப்பட்டு நேற்று முன்தினம் பளையை வந்தடைந்தது.

மூன்றாம் நாள் நடைபணம் நேற்றைய தினம் பளையிலிருந்து ஆரம்பித்து கொடிகாமத்தை வந்தடைந்தது.

கொடிகாமத்திலிருந்து ஆரம்பித்துள்ள இன்றைய நடைபயணம் கைதடியைச் சென்றடையவுள்ளது.

மேலும் நாளைய தினம் கைதடியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள நடைபயணம் யாழ் நகரைச் சென்றடைந்து அதன்பின்னர் நல்லூர் சங்கிலியன் தோப்பில் நிறைவடையவுள்ளது.

இதேவேளை, இன்றைய இந்த நடைபயணத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோருடன் காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களும் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேற்று காணாமல்போன 5 வயது சிறுமி சடலமாக மீட்பு!!
Next post மனைவிக்காக கணவன் உண்ணாவிரதம்!!