ததேகூவுக்குள் சிக்கலை ஏற்படுத்தும் அவசியம் சிலருக்கு உள்ளது!!!

Read Time:1 Minute, 44 Second

184057043Untitled-1தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தும் தேவைப்பாடு சிலருக்கு உள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே கூட்டமைப்பின் தலைவர்கள் தன்னுடன் அதிருப்தியில் உள்ளதாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமையால், கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையில் எனக்கு முரன்பாடு ஏற்பட்டுள்ளதாக, அவர்கள் குறிப்பிடுகின்றனர் என விக்னேஸ்வரன் கூறினார்.

எதுஎவ்வாறு இருப்பினும் அவ்வாறான எதிர்ப்புகள் கூட்டமைப்புக்குள் தனக்கு ஏற்படவில்லை என, விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக வௌியான தகவல்கள் குறித்து பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அத்துடன் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் தன்னுடன் நட்புடனேயே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை ஊடாக கடலட்டைகளை கடத்த முயற்சி – ஐவர் கைது!!
Next post போராட்டக்காரர்களை சுட உத்தரவிட்டதாக கூறப்படும் அதிகாரி நாடு திரும்பினார்!!