போர்க்குற்ற விசாரணை நடத்த கலப்பு நீதிமன்றம் அமைக்க ஐ.நா வலியுறுத்தல்: ஆவணம் இணைப்பு!!

Read Time:2 Minute, 41 Second

1536856652670635665un5இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் கொள்ளும் நோக்கில் தேசிய, சர்வதேசம் இணைந்த கலப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை போர்க்குற்ற விசாரணை அறிக்கை தொடர்பில் இடம்பெறும் ஊடக சந்திப்பில் ஐநா மனித உரிமை ஆணையாளர் செயித் அல் ஹுசேன் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் சிறப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இருதரப்பும் ஏராளமான பொதுமக்களை கொன்றது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை தொடர்பாக இன்று வெியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையின் நீதித்துறை போர்க்குற்றம் பற்றி விசாரிக்க இதுவரை தயாராகவில்லை என்றும் ஆகவே சர்வதேச விசாரணை ஒன்று அவசியமாகின்றது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணைகளை மேற்கொள்வதற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் நடந்த காலம் இலங்கையின் இருண்ட காலம் என்றும் இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இருதரப்பும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளன.

அத்துடன் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என்றும் அறிக்கயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் 30வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று வௌியிடப்பட்டது.

இந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் ஸெய்யித் அல் ஹுஸைன் அவையில் வாசித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 30 ஆண்டுகளாக குகைக்குள் தவம் இருந்த சித்தர் சாமி: முக்தி அடையாததால் வெளியே வந்தார்!!
Next post இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்!!