புதிய கல்வி கொள்கை அறிக்கை இன்று அறிமுகம்!!
புதிய கல்வி கொள்கை அறிக்கை இன்று வௌியிடப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய கல்வி நிறுவகத்தில் கல்விமைச்சர் அகில விராஜ் தலைமையில் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது.
தேசிய கல்வி நிறுவகத்தினால் இந்த புதிய கல்வி கொள்கை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், புதிய கல்வி திட்டம் ஒன்றின் தேவை எழுந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.