பாகிஸ்தான் மந்திரி வீட்டில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலி

Read Time:2 Minute, 56 Second

pakistan.gifபாகிஸ்தான் மந்திரி வீட்டில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். இத்தாக்குதலில் மந்திரி காயமின்றி உயிர் தப்பினார். மனித வெடிகுண்டு: பாகிஸ்தானில் தலீபான் ஆதரவு தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஒடுக்குவதற்காக, நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஒரு பாகிஸ்தான் மந்திரியை கொலை செய்ய முயற்சி நடந்தது. பாகிஸ்தான் அரசியல் விவகாரத்துறை மந்திரி அமிர் முகம். இவர் ஆளுங்கட்சியின் வடமேற்கு எல்லைப்புற மாகாண தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது வீடு, வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் பெஷாவர் நகரில் உள்ளது. இவரது வீட்டு வளாகத்துக்குள் மனித வெடிகுண்டு தீவிரவாதி ஒருவன் நுழைந்தான். 4 பேர் பலி அப்போது அங்கிருந்த பாதுகாப்பு படையினர் அந்த நபரை மேற்கொண்டு முன்னேறி செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். உடனே, அந்த தீவிரவாதி தனது இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை இயக்கி வெடிக்க செய்தான். இதில் வீட்டில் இருந்த 2 பாதுகாவலர்கள் உள்பட 4 பேர் பலியானதாக பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான டெலிவிஷனில் அறிவிக்கப்பட்டது. ஆனால் போலீசாரோ இரண்டு பேர் மட்டுமே இறந்ததாக கூறினர்.

இந்த தாக்குதலில் மந்திரியின் அண்ணன் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

உயிர் தப்பினார்

சம்பவம் நடந்தபோது, மந்திரி அமிர் முகம், அந்த வீட்டில்தான் இருந்தார். நல்லவேளையாக, அவர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த தாக்குதலில் தனது 2 பாதுகாவலர்கள் இறந்து விட்டதாகவும், தனது அண்ணன் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

ஏற்கனவே இரண்டு தடவை தாக்குதல்களில் இருந்து உயிர் தப்பி இருப்பதாகவும், எனவே, இந்த தாக்குதலை கண்டு பயப்பட மாட்டேன் என்றும் அமிர் முகம் தெரிவித்தார்.

இதற்கிடையே, வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள ஸ்வாத் நகரில் நடந்த மற்றொரு குண்டு வெடிப்பில் 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கிளிநொச்சி வான்தாக்குதலில் படுகாயமடைந்த புலி உறுப்பினர் மரணம்
Next post ரூ.50 லட்சம் தராவிட்டால் கல்லூரி மாணவிகளை கடத்த போவதாக மிரட்டல் போலீசார் மாறுவேடத்தில் சென்று வாலிபரை கைது செய்தனர்