ஆந்திராவில் பீர் விற்பனை 13 சதவீதம் சரிந்தது: விலை குறைவால் மது விற்பனை அதிகரிப்பு!!

Read Time:1 Minute, 48 Second

cd4b6b84-bfe2-41a5-b6f4-03197b8e1174_S_secvpfஆந்திராவில் கடந்த ஆண்டு 87.32 லட்சம் (கேஸ்) பெட்டி பீர் விற்பனை ஆனது. ஆனால், இந்த ஆண்டு 76 லட்சம் கேஸ் பீர் மட்டுமே விற்பனையில் உள்ளது. இதன் மூலம் 12.96 சதவீதம் விற்பனை குறைந்து உள்ளது.

விலை ஏற்றமே விற்பனை சரிவுக்கு காரணம் என்று மதுக்கடை உரிமையாளர்கள் கூறினார்கள். ஏற்கனவே பீர் மீது அரசாங்கம் 10 ரூபாய் விலை ஏற்றிய நிலையில் மது விற்பனையாளரும் 10 ரூபாய் விலையை அதிகரித்துள்ளனர்.

அதாவது எம்.ஆர்.பி. விலையை விட அதிகமாக பீர் விற்கப்படுகிறது. ஒரு பாட்டில் பீர் வாங்க 100 ரூபாய்க்கு அதிகமாக செலவு செய்ய வேண்டியது உள்ளது. இதனால் பீர் விற்பனை சரிந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

பீர் விற்பனை சரிந்தாலும் மது விற்பனை அதிகரித்து உள்ளது. ஏனெனில் மது ‘ஒரு பெக்’ வரை சில்லறையாக பெற முடிகிறது. இதனால் மது பிரியர்கள் பீர் பாட்டிலை ஒதுக்கிவிட்டு மதுவுக்கு தாவி விட்டனர்.

இதனால் அரசுக்கு வருமானம் அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு மதுவிற்பனை மூலம் அரசுக்கு ரூ.4706 கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு ரூ.4979 கோடியாக அதிகரித்து உள்ளது.

பீர் விற்பனை சரிந்தாலும் மது விற்பனை 3.36 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதல் மந்திரி அதிரடி: முதியவரின் தட்டச்சு இயந்திரத்தை எட்டி உதைத்து சேதப்படுத்திய போலீஸ் எஸ்.ஐ. சஸ்பெண்ட்!!
Next post திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் இரும்புக்கம்பி: பக்தர் அதிர்ச்சி!!