பிரேமலால் ஜயசேகர மீண்டும் விளக்கமறியலில்!!
முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுல்ல நீதவான் தினேஷ் லக்மால் பெரேரா உத்தரவு பிறப்பித்ததாக எமது அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சி ஆதரவாளர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பிரதியமைச்சர் உட்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி பிரதியமைச்சருடன் சேர்த்து மற்ற ஆறு பேரையும் ஒக்டோபர் மாதம் 6ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.