மகளின் திருமண விடயத்தில் முரன்பாடு – மருமகனை கொன்ற மாமனார்!!
படபோல – படதுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி தனது மருமகனைக் கொலை செய்துள்ளார்.
தனது இளையமகளுக்கு வந்த திருமண வரன் ஒன்று தொடர்பில் எப்போதும் மருமகன் எதிர்ப்பு தெரிவித்து வந்தமையே கொலைக்குக் காணரம் என, சரணடைந்த சந்தேகநபர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 60 வயதான அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் கொலையான மருமகனுக்கு வயது 34 என்பது குறிப்பிடத்தக்கது.
மீடியாகொட பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.