கைதான இராணுவ வீரர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க அனுமதி!!

Read Time:1 Minute, 36 Second

566171488Untitled-1ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில், காவலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் நால்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில், லுதினர் கர்ணல் சிறிவர்த்தன, கோப்ரல் அனுர ஜெயலால் உள்ளிட்ட நான்கு இராணுவ வீரர்கள் இரகசியப் பொலிஸாரால் நியாயமான காரணம் இன்றி காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விடயங்களை ஆராய்ந்த மேன் முறையீட்டு நீதிமன்றம் மனுவை விசாரிக்க அனுமதி வழங்கியது.

அத்துடன் எதிர்வரும் 9ம் திகதி இது குறித்து தகவல் அளிக்குமாறு இரகசியப் பொலிஸாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை விவகாரம் – சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம்!!
Next post ஹெரோயின் வைத்திருந்த தம்பதிக்கு மரண தண்டனை!!