கடதாசி ஆலை ஊழியர்கள் இன்றும் ஆர்ப்பாட்டம்…!!

Read Time:2 Minute, 0 Second

04_11வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாத சம்பளமும் முப்பது வீத நிலுவையும் வழங்கப்பட வில்லை என்று கடந்த 18.09.2015ம் திகதி தொடக்கம் கடதாசி ஆலைக்கு முன்பாக அமைதியான முறையில் நடாத்தி வந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் 14ஆவது நாளாக இன்றும் இடம் பெற்றதுடன் ஊழியர்கள் ஆலையின் கட்டடத்தின் மூன்றாவது மாடியின் மேல் ஏறி தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

கடந்த ஜூலை மாத சம்பளம் இரண்டு தடவைகளில் 70 வீதம் வழங்கப்பட்டதுடன் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுமாக இரண்டு மாதத்திற்கான சம்பளமும் 2014ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான சம்பள நிலுவை உட்பட நான்கு மாத முழுச் சம்பளமும் 30 வீத நிலுவையும் வழங்;கப்பட வேண்டிய நிலையிலயே ஊழியர்கள் கடந்த 18.09.2015 தொடக்கம் ஆலைக்கு முன்னாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தங்களது சம்பளப் பிரச்சினை தொடர்பாக நாங்கள் 14 நாட்களாக இங்கு இருப்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆலைக்குப் பொறுப்பான அமைச்சர் றிஸாட் பதியுதீன் மற்றும் ஆலையின் தலைமை காரியாலயாலயத்தில் உள்ளவர்களுக்கு விளங்க வில்லையா? ஊடகங்களில் வரும் செய்திகளை அவர்கள் பார்க்க வில்லையா? என்று ஆலை ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் தீ விபத்து…!!
Next post சிறுமியுடன் அரை நிர்வாணத்தில் இருந்த முன்னணி வானொலியில் பணியாற்றும் நபர் கைது…!!