By 15 November 2007

ஜெர்மன் துணை அதிபர் விலகல்

germanyf2.gifஜெர்மனியின் துணை அதிபர் பிரான்ஸ் மியூன்டபெரிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 67 வயதாகும் மியூன்டபெரிங் ஜெர்மனியின் தொழிலாளர் அமைச்சராகவும் உள்ளார். தனது குடும்ப பிரச்சனைகள் காரணமாக அவர் பதவி விலகுவதாக தொழிலாளர் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மியூன்ட பெரிங்கின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.



Comments are closed.