கலாச்சார கட்டுப்பாடுகளை தூக்கி வீசி மகனின் ஆசையை நிறைவேற்றிய அன்புள்ள அப்பா..!!

Read Time:2 Minute, 15 Second

7971e62e-2273-45bc-9400-89a389ae315f_S_secvpfகிறிஸ்தவர்கள் இடையே பிரபலமாக இருக்கும் ‘ஹாலோவீன்’ இறந்துபோன குடும்பத்தினர் மற்றும் கடவுளின் மெய்யான விசுவாசிகளை நினைவுகூறும் விதமாக அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த 1700-களில் இருந்து இது கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் அவர்களுக்கு விருப்பமான, பயமுறுத்துகிற வேடங்களுடன் நகரை வலம்வந்து, பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா? என விளையாட்டாகக் கேட்டு இனிப்புகளைப் பெறுவர்.

இதில், பெண் குழந்தைகள் இளவரசி போல வேடம் அணியவே அறிவுறுத்தப்படுவர். இவர்களுக்கு முற்றிலும் எதிராக, வில்லன்களாகவோ, சூப்பர் ஹீரோக்களாகவோ மட்டுமே ஆண் குழந்தைகள் வேடம் அணிவர். குழந்தைகள் மத்தியில் இத்தகைய பாலின வேறுபாடு காண்பிக்கப்படுவது பல பெற்றோருக்கு வெறுப்பை ஏற்படுத்தினாலும், வெளிப்படையாக அவர்களது விருப்பத்தை பலரும் வெளியிடத் தயங்குவர்.

ஆனால், இந்த ஆண்டு பால் ஹென்சன் என்கிற தந்தை, தனது மூன்று வயது மகன் டிஸ்னியின் கற்பனைக் கதாபாத்திரமான ஆரண்டேல் ராணி எல்சா ஆக விருப்பம் தெரிவித்ததும் அந்த உடையை வாங்கிக் கொடுத்து, அவனை மகிழ்வித்துள்ளார்.

சிறு குழந்தைகளுக்கு விருப்பமான வழியில் அவர்களை வாழவிடுவதே, நல்ல பெற்றோரின் கடமை என மற்றப் பெற்றோர்களுக்கும் தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவுறுத்தி வருகிறார். இவரது இந்த சிந்தனையால் ஆயிரக்கணக்கான பெற்றோர்களின் நன்மதிப்பையும், வரவேற்பையும் பெற்றுள்ளார் பால்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியாவில் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய தீவிரவாதிகள்..!!
Next post 14 யானைகள் விஷம் வைத்து கொலை..!!