இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் மேலும் பின்தள்ளப்படும் அபாயம்..!!
Read Time:1 Minute, 11 Second
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டிக்கு முன்பாக, 20 ஓவர் கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 4 ஆவது இடத்தில் இருந்தது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் இரு ஆட்டங்களில் மண்ணை கவ்வியதன் மூலம் இந்திய அணி (110 புள்ளி) தரவரிசையில் 6 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
கடைசி ஆட்டத்திலும் தோற்றால் 8-வது இடத்திற்கு பின்தள்ளப்படும். அதே சமயம் தென்னாபிரிக்கா (115 புள்ளி) 6 ஆவது இடத்தில் இருந்து 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலக சம்பியன் இலங்கை (126 புள்ளி) முதல் இடத்திலும், பாகிஸ்தான் (121 புள்ளி) 2 ஆவது இடத்திலும், அவுஸ்திரேலியா (118 புள்ளி) 3 ஆவது இடமும், மேற்கிந்திய தீவுகள் (117 புள்ளி) 4 ஆவது இடத்திலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating