புள்ளிமான் என நினைத்து வாலிபரை சுட்டு கொன்ற வேட்டைக்காரர்: பிரான்ஸில் ஒரு அதிர்ச்சி சம்பவம்…!!

Read Time:2 Minute, 55 Second

accidently_hunter_002பிரான்ஸ் நாட்டில் புள்ளிமான் என தவறுதலாக நினைத்து வாலிபர் ஒருவரை வேட்டைக்காரர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் Grenoble என்ற நகர்புறத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று 20 வயது வாலிபர் ஒருவர் அந்த காட்டுப்பகுதி வழியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது, எங்கிருந்தோ வந்த ஒரு துப்பாக்கி குண்டு அவரின் மார்பை துளைக்க, அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக 61 வயதான நபர் ஒருவரை கைது செய்து விசாரணை செய்தபோது, வாலிபர் புள்ளிமானை போல காவி நிறத்தில் ஆடை உடுத்தியிருந்ததால் தவறுதலாக சுட்டு விட்டதாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வேட்டையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமைப்பான Aspas கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

வேட்டைக்காரர்களால் தவறுதலாக கொல்லப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வேட்டையாடுவதற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு மட்டும் வேட்டைக்கு சென்று தவறுதலாக 16 நபர்களை வேட்டைக்காரர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.

விலங்குகளை வேட்டையாடுவதற்கு முழுமையாக தடை செய்யப்படாவிட்டாலும் கூட, ஞாயிற்றுகிழமைகளில் நபர்கள் வேட்டைக்கு செல்வதை அரசு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சுமார் 300,000 பொதுமக்களிடம் Aspas கையெழுத்து பெற்று வருகிறது.

ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு நாடும் வாரம் முழுவதும் வேட்டைக்கு செல்ல சட்டரீதியாக அனுமதிப்பதில்லை. ஆனால், பிரான்ஸ் நாட்டில் மட்டும் வாரத்தின் 7 நாட்களிலும் விலங்குகளை வேட்டையாட அந்நாட்டு அரசு அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர் பிரேத பரிசோதனைக்கு முன் உயிருடன் எழுந்தார்: சிக்கலில் அரசு மருத்துவர்…!!
Next post தொடரும் விமான மாயங்கள்: 5 பேருடன் சென்ற இந்தோனேசிய ஹெலிகொப்டர் மாயம்…!!