அதிகாரப்பகிர்வு இடம்பெறாமையே பல பிரச்சினைகளுக்கு காரணமாகும்-அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

Read Time:2 Minute, 30 Second

அதிகாரப்பகிர்வு இடம்பெறாமையே நாட்டில் பொருளாதாரம் உட்பட பல பிரச்சினைகளுக்கு காரணமாகியுள்ளது. நாட்டைத் துண்டாடாத அதிகாரப்பகிர்வே வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வாகும். என்ற உறுதியான நிலைப்பாட்டை சிறீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட மாகாண சபை முறை அப்பிரச்சினையைத் தீர்க்கத் தவறிவிட்டது. அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்டதில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகில் பல நாடுகளில் உள்ளுராட்சி நிர்வாகமுறை முக்கிய இடத்தை வகிக்கிறது. சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் இதற்கு சிறந்த உதாரணங்களாகும். எந்த அமைப்பும் அது உருவாக்கப்படுகின்ற நோக்கத்தை அடையவே உருவாக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையே உலகில் மிகப்பெரிய அமைப்பு. நாடுகளின் பொருளாதாரம், நாடுகளில் நிலவும் பிரச்சினைகள் அதன் தலைவர்களுடன் இணைந்ததான தொடர்புகள் ஆகியனவற்றை ஆராயந்து தீர்வுகாணும் அமைப்பாக அது திகழ்கிறது. புதிய உலகத்தோடு கைகோர்த்துச் செல்லும் சிந்தனையும் புதிய கருத்துக்களும் இதன்மூலமே உருவாகின்றன. இலங்கையில் கிராமசபை முறையின் சாத்தியமற்ற தன்மையினாலேயே புதிய சிந்தனையுடைய உள்ளுராடச் சபை முறை ஏற்படுத்தப்பட்டது. எனினு இது பழைமையாகிவிட்டது. இந்தப் பின்னணியிலேயே உள்ளுராட்சி சபை சட்ட மூலத்திலுள்ள குறைப்பாடுகள் நோக்கப்படவேண்டும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சென்னையில் மூன்று வெவ்வேறு இடங்களில் கொள்ளை
Next post இந்தியஅமெரிக்க அணு ஒப்பந்தம்: 27ந் தேதி விவாதம்