ஈராக்கில் துப்பாக்கி முனையில் ஒலிம்பிக் குழு தலைவர் உள்பட 52 பேர் கடத்தல்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஒரு மாநாட்டு கூடத்தில் அந்நாட்டு ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்தனர். அவர்கள் ஈராக் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் அகமது அல்-ஹத்ஜியா, அவரது 21 மெய்க்காப்பாளர்கள், 30 தடகள வீரர்கள் ஆகியோரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். அவர்கள் அரசாங்க கார் போன்று தோற்றம் அளித்த கார்களில் வந்தனர். கடத்தப்பட்டவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.