ஆபாசமாக உடை அணிந்திருந்ததாக கூறி பெண்களை சுற்றிவளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் (வீடியோ இணைப்பு)…!!
ஆபாசமாக உடை அணிந்திருந்ததாக கூறி 2 பெண்களை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டகாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் sleeveless ஆடை அணிந்தப்படி சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை சுற்றிவளைத்த ஒரு கும்பல், இப்படி ஆபாசமாக உடையணிந்தபடி சாலையில் செல்கிறீர்களே என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அப்பெண்களில் ஒருவர் அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுவிடுகிறார்.
இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களிடத்தில் சிக்கிய பெண்ணை அதிகாரிகள் இரண்டு பேர் அழைத்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த வீடியோ மொராக்கோவில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எனினும் இந்த வீடியோ தொடர்பாக வேறு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை .
Average Rating