எவரெஸ்ட்டில் சீனா அமைத்தது மொபைல் ஸ்டேஷன்

Read Time:2 Minute, 36 Second

சீனாவின் பிரபல மொபைல் போன் இணைப்பு நிறுவனம், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில்,மொபைல் டிரான்ஸ்மிஷன் கோபுரத்தை நிறுவி, வெற்றிகரமாக சோதனையும் செய்துள்ளது. சீனாவில் உள்ள , “சீனா மொபைல்’ என்ற நிறுவனம், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில், டிரான்ஸ்மிஷன் கோபுரம் அமைக்க திட்டமிட்டது. அடுத்தாண்டு ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ள நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில், ஒலிம்பிக் ஜோதியை எடுத்துச்சென்று ஒளிபரப்ப சீன அரசு திட்டமிட்டுள்ளது.இதையொட்டியும், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் மலையேற்ற வீரர்களுக்கு உதவும் வகையிலும் எவரெஸ்ட் சிகரத்தில் “டவரை’ அமைத்துள்ளது இந்நிறுவனம், அங்கிருந்து மொபைல் போன் அலைவரிசை சரியாக கிடைக்கிறதா என்றும் சோதனை செய்து வெற்றி கண்டுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு இடங்களில் “டவர்’ அமைக்கப்பட்டுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தில், மலையேறும் வீரர்கள் செல்லும் பாதையில் இந்த “டவர்’கள் அமைந்துள்ளதால், அவர்களுக்கு போன் பேசும் போது, சிக்கல் இருக்காது. மொபைல் “டவர்’ அமைப்பதற்கான சாதனங்களை எல்லாம் கொண்டு செல்ல, காட்டெருதுகளையும், மலையேறும் சுமை தூக்கும் தொழிலாளிகளையும் பயன்படுத்தி, இந்த நிறுவனம், “டவர்”களை அமைத்துள்ளது. சீனா மெபைல் நிறுவன அதிகாரிகள் கூறுகையில்,”மலையேறும் வீரர்கள், விஞ்ஞானிகளுக்கு இந்த “டவர்’கள் மூலம், மொபைல் போன் இணைப்பு கிடைக்கும்’ என்று கூறினர். ஒலிம்பிக் போட்டியை ஒட்டி, இதுவரை இல்லாத அளவுக்கு மிக நீண்ட தூர, அதுவும் மலைப்பாதையில் ஜோதியை வீரர்கள் எடுத்துச்செல்லும் வகையில், ஏற்பாடுகளை சீன விளையாட்டுஆணையம் செய்து வருகிறது. அப்போதில் இருந்து மொபைல் போன் “டவர்’ இயங்கத்துவங்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உக்ரேன் நாட்டில் சுரங்கம் இடிந்து விழுந்து 100 தொழிலாளர்கள் பலி
Next post ஜனவரி – 8 இல் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல்; முஷாரப் அறிவிப்பு