சீர்காழி அருகே உப்பனாற்று பாலம் உடைந்து பள்ளத்தில் சிக்கிய பஸ்: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்…!!

Read Time:4 Minute, 43 Second

7e0f44bc-0321-472b-a551-a9bd52029569_S_secvpfநாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தூரக்காடு பகுதியில் உப்பனாறு உள்ளது. இந்த ஆற்றில் உப்பனாறு பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது ஆகும். ஒரு வாகனம் மட்டுமே செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இந்த குறுகிய பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன.

சென்னை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி ஆகிய இடங்களில் இருந்து காரைக்கால், நாகை, திருவெண்காடு, பூம்புகார், வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய இடங்களுக்கு இந்த பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும் நவக்கிரக கோவில்கள் அமைந்துள்ள திருநள்ளாறு, திருவெண்காடு, கீழபெரும்பள்ளம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள கோவில்களுக்கு சென்னை உள்பட பல பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் இந்த பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் சிதலமடைந்து இருந்தது. எனவே அதனை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுதொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் அரசு பஸ் சீர்காழியில் இருந்து மயிலாடுதுறையை நோக்கி சென்றது. அந்த பஸ் உப்பனாற்று பாலத்தில் சென்றபோது பாலத்தின் நடுவே இருந்த பள்ளத்தில் பஸ் சக்கரம் சிக்கி கொண்டது. இதைத் தொடர்ந்து பாலம் உடைந்து பஸ்சின் முன்பகுதி ஆற்றை நோக்கி சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் மற்றும் கண்டக்டர், பயணிகள் அவசர அவசரமாக பஸ்சில் இருந்து பாலத்தில் இறங்கி உயிர் தப்பினர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சீர்காழி அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் சுரேஷ், போக்குவரத்து ஊழியர்களை அழைத்து சம்பவ இடத்துக்கு வந்து பஸ்சை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் பஸ்சை மீட்க முடியவில்லை.

இதனை தொடர்ந்த ஜே.சி.பி. வாகனம் கொண்டு வரப்பட்டு பஸ் மீட்கப்பட்டது.

பஸ் மீட்கப்பட்டாலும் பாலம் உடைந்து விட்டதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. சீர்காழி டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்சிங்கார வேலு ஆகியோர் பேரிகாடு அமைத்து வாகனங்களை திருப்பி விட்டனர். மயிலாடுதுறை செல்லும் வாகனங்கள் 20 கி.மீ. சுற்றி செல்கின்றன. காரைக்கால், நாகை, திருவெண்காடு, பூம்புகார், வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் எடக்குடி, வடபாதி கிராம சாலைகள் வழியாக 10 கி.மீ. சுற்றி செல்கின்றன. பள்ளி வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. இதனால் மாணவர்கள் அவதியடைந்தனர்.

பாலம் உடைந்த தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், சக்தி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகரன், நகர அ.தி.மு.க. செயலாளர் பக்கிரிசாமி, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஏ.வி. மணி, மாவட்ட பிரதிநிதி செல்கார்த்தி, வக்கீல் நெடுஞ்செழியன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இந்த பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூட்டிய வீட்டில் போக்குவரத்து ஊழியர் மர்மச்சாவு…!!
Next post உலகில் முதல் முறையாக 1 வயது குழந்தைக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை: சாதனை படைத்த மருத்துவர்கள்..!!