அவசர போலீசுக்கு காதல் வலை வீசிய பெண்
அமெரிக்காவில் வாஷிங்டனை சேர்ந்த பெண் டுடாஷ். அவர் பக்கத்து வீட்டாரால் எழுப்பப்பட்ட இரைச்சலைத் தொடர்ந்து அவசர போலீசுக்கு டெலிபோன் செய்தார். போலீஸ்காரர் ஒருவர் விரைந்து சென்று அமைதி ஏற்படுத்தினார். அதன் பிறகு டுடாஷ் மீண்டும் அவசர போலீசுக்கு டெலிபோன் செய்து கடந்த முறை அனுப்பிய அழகான போலீஸ்காரரை நான் சந்திக்க விரும்புகிறேன். அவரது பெயர் என்ன என்று கேட்டு இருக்கிறார்.
அவசர போலீசுக்கான போனை எடுத்தவர் எதற்காக அவரை சந்திக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டார். நான் உங்களிடம் உண்மையை சொல்லி விடுகிறேன். எனக்கு 45 வயது ஆகிறது. நான் அவரை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன். அவர் பெயர் தெரியாமல் எப்படி அவரை அழைப்பது. நான் என்வீட்டு டெலிபோன் நம்பரை தருகிறேன். அவரை வீட்டுக்கு வரச்சொல்லுங்கள் என்று கூறி இருக்கிறார்.
அதன்படியே அந்த அழகான போலீசாரும் அந்த பெண்ணை தேடி வந்தார். எந்த அவசர நிலையும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டார். பிறகு அவசர போலீஸ் வசதியை தவறாகப்பயன்படுத்தியதற்காக அவரை கைது செய்தார். இந்த குற்றத்துக்கு ஒரு ஆண்டு ஜெயிலும், அபராதமும் உண்டு.