சீனாவில் புயலுக்கு 154 பேர் பலி
Read Time:53 Second
சீனாவில் பிளிஸ் என்ற புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஹுனான் மாநிலத்தில் 23 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இங்கு 78 பேர் பலியானார்கள். 100 பேரை காணவில்லை. பிïஜியன் மாநிலத்தில் 43 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். 19 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். 24 பேரை காணவில்லை. குவாங்டாங் மாநிலத்தில் 33 பேர் பலியானார்கள்.
ஹுனான் மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட சாலைகள் அடித்து செல்லப்பட்டன. புயல் மழை காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.