வரவிருக்கும் பனிக்காலம்: அகதிகளின் மரணத்தை தடுக்க ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை…!!

Read Time:2 Minute, 22 Second

refugee_freeze_003ஐரோப்பிய நாடுகளில் பனிக்காலம் வரவிருப்பதால் குடியேற வரும் அகதிகளின் உயிரிழப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
ஈரான், ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக அந்நாட்டு மக்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையில், ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுத்து வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அவர்கள், திறந்தவெளி முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஆயிரக்கணக்கான அகதிகள் பால்கன் வழியாக ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கு குடியேறுவதற்காக அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவி வரும் பனித்தாக்கத்தை விட இனி ஏற்படவிருக்கும் காலநிலை மாற்றத்தால் அங்கு பனியின்தாக்கம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் Jean-Claude Juncker, பனியின் தாக்கத்தால் அகதிகள் இறந்துவிடாமல் இருக்க உடனடியாக தீர்வு எடுக்கப்படவேண்டும் என்று பிரஸ்ஸல்லில் நடைபெற்ற ஐரோப்பிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மேலும், ஒவ்வொரு நாளும் அகதிகளின் வருகையை கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் இந்த காலநிலை மாற்றத்தில் இருந்து அகதிகளை காப்பாற்றுவதற்கு தீர்வு காணாவிட்டால் விரைவில் பால்கன் பகுதியில் உள்ள குளிர் ஆறுகளில் குடும்பங்களை பார்க்கநேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமானம் விழுந்து நொறுங்கியது: 7 பேர் பலி…!!
Next post தோழியின் கர்ப்பப்பையை வெட்டி எடுத்த கொடூர பெண்…!!