பாக். போர் விமானம் விழுந்து நொறுங்கியது – பெண் விமானி பலி…!!
Read Time:1 Minute, 17 Second
பாகிஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்துகுள்ளானதில் ஒரு பெண் விமானி பலியானார்.
இன்று மியான்வாலி நகரம் அருகே பாகிஸ்தான் போர் விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தை மரியம் முக்தார் என்ற பெண் விமானி இயக்கியுள்ளார். இவருடன் ஷாகிப் அபாஸி என்ற அதிகாரியும் இருந்துள்ளார். விமானத்தில் தொழிநுட்ப பிரச்சனை ஏற்பட்டு விழப்போவது தெரிந்தவுடன், பொதுமக்கள் இல்லாத இடமாக பார்த்து விமானத்தின் அவசரகால வாசல் மூலம் இருவரும் வெளியேறியுள்ளனர்.
ஆனால், இந்த விபத்தில் பெண் விமானி மரியம் முக்தார் உயிரிழந்தார். ஷாகிப் அபாஸி படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தில் மொத்தமாக 19 பெண் விமானிகள்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating