புகை­யி­ர­தத்தின் கூரை மீது ஏறிய குடி­யேற்­ற­வாசி மின்­சாரத் தாக்­கு­த­லுக்கு இலக்­காகி மரணம்..!!

Read Time:2 Minute, 32 Second

timthumbபுகை­யி­ர­த­மொன்றின் கூரையில் ஏறிய மொரோக்கோ குடி­யேற்­ற­வா­சி­யொ­ருவர் அதி சக்தி வாய்ந்த மின்­சாரம் பாய்ந்து கொண்­டி­ருந்த மின் இணைப்பைத் தவ­று­த­லாக தொட்­டதால் மின்­சார தாக்­கு­த­லுக்கு உள்­ளாகி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த சம்­பவம் கிரேக்க மசி­டோ­னியா எல்­லையில் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­நி­லையில் எரிந்து கரு­கிய அந்­ந­பரின் சட­லத்தை அங்­கி­ருந்த ஏனைய குடி­யேற்­ற­வா­சிகள் மீட்டு தரைக்கு எடுத்து வந்­தனர்.

தரித்­தி­ருந்த அந்த புகை­யி­ர­தத்தின் கூரையில் குறிப்­பிட்ட நபர் எதற்­காக ஏறினார் என்­பது அறி­யப்­ப­ட­வில்லை.

வறிய நாடு­க­ளி­லி­ருந்­து­ பொ­ரு­ளா­தார அனு­கூ­லத்தைப் பெறும் நோக்­காக குடி­யேற்­ற­வா­சிகள் பலர் வரு­வது அதி­க­ரித்­துள்­ள­தை­ய­டுத்து மசி­டோ­னியா தனது எல்லைப் பிராந்­தி­யத்தை மூடிய நிலை­யி­லேயே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

மசி­டோ­னியா போரால் பாதிக்­கப்­பட்ட ஆப்­கா­னிஸ்தான், ஈராக், சிரியா ஆகிய நாடு­களைச் சேர்ந்த குடி­யேற்­ற­வா­சி­க­ளை­மட்டுமே எல்­லையைக் கடந்து தனது நாட்­டிற்குள் பிர­வே­சிக்க அனு­ம­தித்து வரு­கி­றது.

இந்­நி­லையில் குறிப்­பிட்ட மொரோக்கோ குடி­யேற்­ற­வாசி, தரித்­தி­ருந்த அந்தப் புகை­யி­ர­தத்தின் கூரையில் முன்­கூட்­டியே மறைந்­தி­ருந்து பய­ணத்தை மேற்­கொள்ளத் திட்­ட­மிட்­டி­ருந்­தி­ருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கி­றது.

கடந்த சனிக்­கி­ழமை இதே வழி­மு­றையில் புகையிரதத்தின் கூரையில் ஏறிய 24 வயது மொரோக்கோ குடியேற்றவாசியொருவர் மின்சார இணைப்பொன்றைத் தொட்டதால் கடும் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் உலகின் மிகப்பெரிய குளோனிங் தொழிற்சாலை…!!
Next post ஓசூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை ஏன்?: உருக்கமான தகவல்கள்..!!