சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் இங்கிலாந்து வீரர்…!!

Read Time:1 Minute, 39 Second

bb3649f9-9c9d-4cea-a4c8-1791719c2bb8_S_secvpfசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக இங்கிலாந்து வீரர் ஒருவர் சென்றார்.

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து வருகின்றனர். அதன் கட்டுமான பணிக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை 3 வீரர்கள் சென்று திரும்புகின்றனர்.

அந்த குழுவில் இதுவரை இங்கிலாந்து விண்வெளி வீரர்கள் இடம் பெற்றதில்லை. இந்த நிலையில் தற்போது முதன் முறையாக இங்கிலாந்து வீரர் ஒருவர் இடம் பெற்று அங்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

அவரது பெயர் டிம் பீக். 43 வயதான இவருக்கு ரெபேகா என்ற மனைவியும், தாமஸ், ஆலிவர் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

இதற்காக இவர் மேற்கு சூசெஸ்சில் உள்ள சிசெஸ்டர் நகரில் 18 மாதங்கள் பயிற்சி பெற்றுள்ளார். தற்போது இவருடன் ரஷிய வீரர் ஒருவரும், அமெரிக்க வீரர் ஒருவரும் விண்வெளி ஆய்வகம் சென்றுள்ளனர்.

இவர்கள் 3 பேரும் நேற்று கஜகஸ்தானில் இருந்து சோயுஷ் ராக்கெட் மூலம் புறப்பட்டு சென்றனர். டிம் பீக்கை அவரது மனைவி மற்றும் மகன்கள் கையசைத்து கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேபாளத்தில் செங்கல் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 5 இந்தியர்கள் உட்பட 7 பேர் பலி…!!
Next post வேதாரண்யம் அருகே படகு மூலம் மீண்டும் பள்ளிக்கு சென்ற மாணவ–மாணவிகள்…!!