ஹாங்காங் பாரில் பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆஸ்திரேலிய மந்திரி ராஜினாமா..!!

Read Time:1 Minute, 54 Second

e2218332-3b48-4183-a687-0957df0a41b3_S_secvpfஆஸ்திரேலியாவில் பிரதமர் மால்கோம் டர்ன்புல் தலைமையிலான மந்திரிசபையில் நகர கட்டமைப்புத்துறை மந்திரியாக பதவி வகிக்கும் ஜேமி பிரிக்ஸ் சமீபத்தில் அரசுமுறை பயணமாக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் நகருக்கு சென்றிருந்தார்.

அப்போது, நள்ளிரவு நேரத்தில் அங்குள்ள பிரபல மதுவிடுதிக்கு சென்ற அவர், அங்கு பணியாற்றும் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இந்த செய்தி ஊடகங்களின் மூலம் பரவத் தொடங்கியதும் இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி பிரதமர் மால்கோம் டர்ன்புல் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நேரடியாக மன்னிப்பு கேட்டதாக முன்னர் தெரிவித்திருந்த மந்திரி ஜேமி பிரிக்ஸ், நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதேபோல், தனது அரசியல் எதிரியை பழிவாங்க ஆட்சி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு மந்திரியான மால் புரோ என்பவரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இருவரின் ராஜினாமா கடிதங்களும் ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மால்கோம் டர்ன்புல், மேற்படி துறைகளுக்கு புதிய மந்திரிகள் நியமிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோழியின் முன்னே ஆண் நண்பரை தாக்கிய பொலிஸார்: வெளியாகிய காணொளி…!!
Next post தாய்லாந்தில் நாயை கிண்டல் செய்த தொழிலாளி கைது: அடுத்த நாளே இறந்த அரசரின் ஆருயிர் நாய்…!!