1.66 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் விற்கப்பட்ட மீன்…!!

Read Time:1 Minute, 48 Second

14098594462-01-02ஜப்பானில் மீன் ஒன்று 1.4 கோடி ஜப்பானிய யென் (சுமார் ஒருகோடியே 66 இலட்சம் கோடி ரூபாவுக்கு, ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

டோக்கியோ நகரிலுள்ள சுகிஜி மீன் சந்தையில் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு மீன் ஒன்று ஏல விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

இம்முறை புத்தாண்டு மீன் ஏல விற்பனை நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் 200 கிலோ எடையுள்ள மீனொன்று 14 மில்லியன் யென்களுக்கு வாங்கப்பட்டது.

ஜப்பானின் எமோரி பிராந்திய த்தில் இம்மீன் பிடிக்கப்பட்டிருந்தது.

கடந்த வருடத்தை விட அதிக தொகைக்கு மீன் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற ஏல விற்பனையில் 45.1 இலட்சம் யென்களுக்கு மீனொன்று விற்பனை செய்யப்பட்டிருந்தது.

எனினும் 2013ஆம் ஆண்டில் 15.5 கோடி யென்களுக்கு மீனொன்று விற்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை ஏலத்திற்கு விடப்பட்ட 200 கிலோ எடையுள்ள மீனை ஜப்பானின் சுசி உணவு விடுதி நிறுவனத் தலைவரான கியோஷி கிமுரா வாங்கினார்.

இம்மீன் மூலம் தயாரிக்கப்பட்ட சுசி உணவை வாங்குவதற்கு பெரும் எண்ணிக்கையான மக்கள் காத்திருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாம்பை கையால் பிடித்து தூக்கி எறியும் யுவதி…!!
Next post ஜோசப் பரராஜசிங்கம் கொலை விவகாரம்: 4ஆவது சந்தேகநபருக்கு விளக்கமறியல்…!!