ஆவணங்களை தேடுவதற்காக கிரிதல இராணுவ முகாமின் புலனாய்வுப் பிரிவு சீல் வைப்பு…!!

Read Time:1 Minute, 29 Second

4fcb5331-b216-48b9-a1a2-cf96e357940a_S_secvpf.gifஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமற்போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக கிரிதல இராணுவ முகாமின் புலனாய்வு பிரிவின் அலுவலகம் சீல் வைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவிக்கின்றது.

ஊடகவியலாளர் காணாமற்போனமை தொடர்பில் நீதிமன்றம் கோரியிருந்த ஆவணங்களை பரிசோதனை செய்வதற்காக இராணும் மற்றும் பொலிஸார் கொண்ட குழுவொன்று கிரிதல இராணுவ முகாமிற்கு சென்றுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் கோரியுள்ள ஆவணங்களை இலகுவாக தேடுவதற்காகவே இராணுவத்தளபதியின் பணிப்புரைக்கு அமைய இராணுவ முகாமின் புலனாய்வு பிரிவின் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதும் அதனை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மத்தல விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெற்களை அகற்ற முடிவு…!!
Next post இந்திய ​வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளரை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்..!!