சிங்கப்பூரில் திருட்டு: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 7 ஆண்டு சிறை, 12 கசை அடி…!!

Read Time:1 Minute, 48 Second

35ef5a09-9480-4821-a89c-e3f8fb307ed7_S_secvpfசிங்கப்பூரில் திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்ததோடு, 12 கசை அடிகள் வழங்கவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் அலி யூசுப் சைபூ (35). வெளிநாட்டு பணத்தை மாற்றி தரும் தொழில் செய்து வரும் இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி ஒரு கார் நிறுத்தத்தில், தனது இரண்டு வயது மகனுடன் இருந்தார்.

அப்போது அங்கு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவிச்சந்திர சாகரன் (28), தட்சிணாமூர்த்தி பெருமாள் (29), அண்ணாதுரை ராமன் (43) உடபட பலரும் சேர்ந்து, அலியின் காரை உடைத்து, அவரை தாக்கியதோடு, காரில் இருந்த 6 லட்சத்து 24 ஆயிரத்து 36 சிங்கப்பூர் டாலர் மற்றும் வெளிநாட்டு பணக்கட்டுகளை திருடி சென்றுவிட்டனர்.

இதில் ரவிச்சந்திர சாகரன், தட்சிணாமூர்த்தி, அண்ணாதுரை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் ரவிச்சந்திரனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், 12 கசை அடி வழங்கவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தட்சிணாமூர்த்தி, அண்ணாதுரை ஆகியோர் குறித்த வழக்கு அடுத்த வாரம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முத்தத்துக்கு நோ சொன்ன மொராக்கோ இளவரசர்: வைரல் வீடியோ…!!
Next post உலகிலேயே செல்பி சாவுகள் இந்தியாவில்தான் அதிகம்: ஆய்வு…!!