பர்கினா பாசோ நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு…!!

Read Time:2 Minute, 20 Second

bf7a36c6-32bc-4bea-ae01-60d077c33b0f_S_secvpfமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குட்டித்தீவு நாடு பர்கினா பாசோ. 2 லட்சத்து 74 ஆயிரத்து 200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது. மாலி, நைஜர், பெனின், டோகோ உள்ளிட்ட 6 நாடுகளை எல்லைகளாக கொண்டது.

இதன் தலைநகரம் குயாகாடோகு. இங்கு 147 அறைகள் கொண்ட ஒரு நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு ஐ.நா. ஊழியர்களும், மேற்கத்திய நாடுகளின் சுற்றுலா பயணிகளும் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் அங்கு தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கிகளுடன் உள்ளே புகுந்து அங்கிருந்த அறைகளை கைப்பற்றி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசாரும், ராணுவமும் விரைந்து சென்றனர்.

ஏற்கனவே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் ராணுவமும் விரைந்து சென்று தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

முன்னதாக, இதில் ஓட்டலில் தங்கியிருந்த 20 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு மந்திரி தற்போது பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மிகவும் இளையவர்களாக தோற்றமளிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த தாக்குதலில் காயம் அடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு அல்–கொய்தாவின் ‘இஸ்லாமிக் மாக்ரேப்’ என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானிக்கு தேசிய அறிவியல் பதக்கம்: 22-ந் தேதி ஒபாமா வழங்குகிறார்…!!
Next post பாகிஸ்தான் ராணுவ மந்திரியின் ஈரான் பயணம் திடீர் ரத்து…!!