நீங்கள் மட்டும்தான் யோகா செய்வீர்களா?: உலக சாதனைக்காக எஜமானர்களுடன் ஒருமணி நேரம் டாகாசனம் செய்த 270 நாய்கள்…!!
Read Time:1 Minute, 3 Second
உலக சாதனைக்காக ஒரே இடத்தில் தங்களது எஜமானர்களுடன் 270 நாய்கள் அமர்ந்து யோகாசனம் செய்த சாகச நிகழ்ச்சி ஹாங்காங் நகரில் நேற்று நடைபெற்றது.
ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருப்பதற்கு ஹாங்காங் நகரில் நாய்களுக்கும் யோகாசன பயிற்சி மையம் நடத்தப்படுகிறது. சுஸெட் அக்கெர்மென் என்பவர் நடத்தும் இந்த மையத்தில் பயிற்சி பெற்ற 270 நாய்கள் நேற்று தங்களது எஜமானர்களுடன் ஒரே இடத்தில் அமர்ந்து யோகாசனம் செய்தன.
டாகாசனம் (Dog Asanam) என அழைக்கப்படும் இக்கலையை காலை நீட்டியும், மடித்தும் தலையை திருப்பியும் இந்த நாய்கள் செய்துகாட்டியதை நாய்களின் உரிமையாளர்களுடன் ஏராளமான பார்வையாளர்களும் கண்டு ரசித்தனர்.
Average Rating